கோலாலம்பூர்:
அம்பாங், தாமான் டகாங் பெர்மாய், ஜாலான் டகாங் பெர்மாய் 3, தாமான் டகாங் பெர்மாய் ஆகிய இடங்களில் வீடுடைத்து கொள்ளையில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் 08 குமப்பாலின் உறுப்பினர்ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
41 வயதான சந்தேக நபர் 08 என்ற என்னை பச்சை குத்திய உள்ளூர்காரர் என்றும் , அவர் புச்சோங்கில் உள்ள ஜாலான் இண்டஸ்ட்ரியில் உள்ள அவரது வீட்டில், நண்பகலில் தடுத்து வைக்கப்பட்டார் என்றும் அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், ACP முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.
தேடப்பட்டுவந்த சந்தேகநபர் ஏற்கனவே குற்றம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காக 12 புகார்களும் 13 முந்தைய குற்றப்பதிவுகளும் உள்ளது என்றும், மேலும் அவர் தற்போது மெத்தம்பேட்டமைன் என்ற போதைப்பொருளை பாவித்திருப்பது சோதனையில் கண்டுபிடித்ததாகவும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேகநபரிடமிருந்து பிளேஸ்டேஷன் 3 யூனிட்கள், ஆறு கைத்தொலைபேசிகள் , மூன்று மடிக்கணினிகள், மூன்று கைக்கடிகாரங்கள், ஏழு நெக்லஸ்கள் மற்றும் இரண்டு கேமராக்களையும் போலீசார் கைப்பற்றினர்.
அம்பாங்கில் நடந்த 4 வீடுடைப்பு வழக்குகளில் தொடர்புடைய சந்தேக நபர் போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.