மூதாட்டியிடம் ஆயுதமேந்திக் கொள்ளை; ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு

ஈப்போ:

ங்குள்ள ஒரு வங்கியில் கத்தியை காட்டி மூதாட்டி ஒருவரிடம் கொள்ளையடித்தது தொடர்பில் சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் வைரலான சம்பவத்தின் வீடியோவுடன் தொடர்புடைய பதிவுகளின்படி, சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட் காவல்துறை தலைவர், துணை ஆணையர் யஹாயா ஹாசன் கூறினார்.

இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை (செப். 8) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 392/397 பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் ஒரு நிமிடம், மூன்று வினாடிகள் கொண்ட குறித்த வீடியோவில், இருண்ட முகக் கவசத்துடன் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் வங்கிக்குள் நுழைந்து, தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் முன் இரண்டு பெண்களைக் கொள்ளையடிக்க முயற்சிக்கிறார்.

இந்த சம்பவம் மே 14 மாலை 5.20 மணியளவில் நடந்ததாக ACP யஹாயா தெரிவித்தார்.

“குறித்த சம்பவம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் ஈப்போ மாவட்ட காவல்துறை குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் துணைத் தலைவர் முகமட் சுல்கெப்லி முகமட் முக்தாரை 012-433 6999 என்ற எண்ணில் அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு மையத்தை 05-254 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here