கிள்ளான்:
MRT காஜாங் வழித்தடத்தில் பெண்களுக்கு மட்டுமான பயணப்பெட்டி சேவையின் சோதனை ஓட்டம் இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியை சிறப்பாக செயல்படுத்த முடிந்தால், மற்ற வழித்தடங்களிலுள்ள ரயில்களிலும் பெண்கள் மட்டுமே பணம் செய்யக்கூடிய ரயில் பயணப்பெட்டிகளை அதிகமாக வழங்குவதற்கான முயற்சியை அமைச்சகம் விரிவுபடுத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார்.
“MRT ரயில்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் புகார்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, பெண்களுக்கு மட்டுமேயான பயணப் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.









