அம்பாங் குடியிருப்பில் இறந்து கிடந்த மூவரின் நச்சுயியல் முடிவுகள் இரண்டு வாரங்களில் பெறப்படும்

அம்பாங், கம்போங் பாருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வியாழன்  இறந்து கிடந்த மூன்று நபர்களின் நச்சுயியல் முடிவுகள் இரண்டு வாரங்களுக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான், தாய் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய அறிக்கை பெறப்படும் என்றார்.

இந்தச் சம்பவத்தின் நோக்கத்தைக் கண்டறிய போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (இதில்) நிதிப் பிரச்சினைகளும் உள்ளடங்கும் என்று அவர் இன்று இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.

கடந்த வியாழன் அன்று, 42 வயதான பெண் மற்றும் அவரது 15 மற்றும் 14 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் சடலங்கள், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் காலை 7.44 மணியளவில் கண்டெடுக்கப்பட்டன. அறையில் உள்ள சோபாவின் அடியில் கரி மற்றும் லைட்டரும், உயில் மற்றும் பணம் அடங்கிய உறையும் காணப்பட்டதாக ஹுசைன் தெரிவித்தார்.

பிசின் (cello) டேப்பைப் பயன்படுத்தி கதவு மற்றும் ஜன்னல் இறுக்கமாக மூடப்பட்ட நிலையில் முதல் படுக்கையறையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here