MCA தேர்தல்: தலைவர் பதவிக்கு டாக்டர் வீ மற்றும் டான் இடையே நேரடிப் போட்டி

கோலாலம்பூர்:

இம்மாத இறுதியில் நடைபெறும் கட்சித் தேர்தலில், MCA தலைவர் பதவிக்கு கட்சியின் நடப்பு தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங்கும், முன்னாள் மத்தியக் குழு உறுப்பினர் டான் சோங் செங்கும் இடையில் இது நேரடிப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இன்று திங்களன்று (செப்டம்பர் 11) விஸ்மா MCA வில் மாலை 5 மணிக்கு வேட்புமனுச் செயல்முறை முடிவடைவதற்கு முன்பு, டாக்டர் வீ மற்றும் டான் தங்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர்.

MCA கட்சியின் துணைத் தலைவர் மற்றும் MCA மகளிர் அணித் துணைத் தலைவர் ஆகிய இரு பதவிகளுக்கும் முறையே ஒருவர் மட்டுமே போட்டியிட்டனர். இதன்மூலம் , தற்போதுள்ள டத்தோ டாக்டர் மஹ் ஹாங் சூன் துணைத் தலைவராகவும், தீ ஹூய் லிங் மகளிர் அணித் துணைத் தலைவராகவும் நீடிப்பார்கள் என்பது தெளிவாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here