சவுரவ் கங்குலி முழுநேர ஸ்டீல் தொழிலதிபராக மாறுகிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, மேற்கு வங்க மாநிலம் பாஸ்சிம் மெதினிபூரில் உள்ள சல்போனி என்ற இடத்தில் ஸ்டீல் தொழிற் சாலையை தொடங்கி முழுநேர தொழிலதிபர் என்ன பதிவியை அடைய உள்ளார்.   மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஸ்பெயின் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு 12 நாள் பயணமாக சென்ற குழுவில் இடம்பெற்றுள்ள கங்குலி, ஐந்து முதல் ஆறு மாதங்களில் தொழிற்சாலை கட்டி முடிக்கப்படும் என்று கூறினார்.

மேற்கு வங்காள பகுதியில் மூன்றாவது ஸ்டீல் தொழிற்சாலையை உருவாக்கும் பணி கள் தொடங்கியுள்ளோம். முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க நான் இந்த வாய்ப் பைப் பயன்படுத்துகிறேன். நான் கிரிக்கெட் மட்டுமே விளையாட தகுதியானவர் என பலர் நம்புகிறார்கள். ஆனால் நான் 2007 இல் ஒரு சிறிய ஸ்டீல் ஆலையைத் தொடங் கினோம். ஆறு மாதங்களில் நாங்கள் மெதினிபூரில் எங்களின் புதிய ஸ்டீல் ஆலையை கட்டும் பணிகளை துவங்க உள்ளோம் என்று பேட்டி ஒன்றில் கங்குலி கூறினார்.

மாட்ரிட்டில் நடந்த ‘பெங்கால் குளோபல் பிசினஸ் உச்சிமாநாட்டில் (பிஜிபிஎஸ்)’ உரையாற்றிய கங்குலி, இன்னும் ஒரு வருடத்தில் தன்னால் அதிநவீன வசதி கொண்ட தொழிற்சாலையை கட்டி முடிக்க முடியும் என்று கூறினார். TCS தொடர்ந்து டாடா ஸ்டீல் நிறுவனத்தில் 38 பேர் பணிநீக்கம்.. சந்திரசேகரன் எடுத்த அதிரடி முடிவு..! முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி 50-55 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாத்தாவால் தொடங்கப்பட்ட தனது குடும்ப வணிகத்தையும், அந்த நேரத்தில் மாநில அரசு எவ்வளவு ஆதரவாக இருந்தது என்பதையும் பெங்கால் குளோபல் பிசினஸ் உச்சிமாநாட்டில் குறிப்பிட்டு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here