TVET திட்டத்திற்கு RM30 மில்லியன் ஒதுக்கீடு -துணைப் பிரதமர்

கூச்சிங்:

தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET ) திட்டத்தின் மேம்பாட்டிற்காக 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தொழிலாளர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்த TVET மற்றும் CENTEXS ஆகியவற்றுக்கு இடையேயான நீண்டகால ஒத்துழைப்புக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் கூறினார்.

“பல்வேறு பாடப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கவும், உயர் தொழில்நுட்பத் துறைகளுக்கான ஆய்வகங்கள் மற்றும் கற்றல் வசதிகளை மேம்படுத்தவும் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Centexs மிகவும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதில் முன்னணியில் இருப்பதால், ஹைட்ரஜன் மற்றும் சூரிய ஆற்றல் துறை சரவாக்கை முன்னணியில் வைப்பதில் வெற்றி பெற்றுள்ளது என்று தேசிய TVET குழுவின் தலைவரான அஹ்மட் ஜாஹிட்கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here