தொழில் அதிபராக மாறிய நயன்தாரா…!

நடிகர் – நடிகைகள் சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட், கட்டுமானம், நகை வியாபாரம், ஓட்டல்கள் என்று பல தொழில்களில் பணத்தை முதலீடு செய்து வருமானம் பார்க்கிறார்கள்.

இந்த வரிசையில் தமிழ், திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாராவும் தொழில் துறையில் இறங்கி இருக்கிறார். ஏற்கனவே கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து படங்கள் தயாரிக்கிறார். கேரளாவில் பல ஏக்கரில் நிலங்கள் வாங்கி போட்டுள்ளார்.

வீடுகள், அலுவலகங்கள் கட்டி வாடகைக்கு விட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டார்.

தற்போது வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து சரும பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் இறங்கி இருக்கிறார். இதன்மூலம் சர்வதேச தொழில் அதிபராக மாறி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here