கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் 12வது மலேசியத் திட்டத்தின் (12MP) இடைக்கால மீளாய்வு ( MTR) அமர்வின் போது நடந்த கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி அகால்புடி விவகாரத்தில் விடுவிக்கப்பட்டது தொடர்பில் மக்களவையில் கேள்விகள் எழுந்தது.
அதற்கு பதிலளித்த பிரதமர், ஜாஹிட் விவகாரத்தில் முடிவெடுக்கும் அனைத்து அதிகாரமும் தேசியத் சட்டத்துறைத் தலைவருக்கும் நீதிமன்றத்திற்கும் தான் உள்ளது என்றும், தேசிய சட்டத்துறை தலைவர் முடிவில் பிரதமர் என்ற முடிவில் தாம் எப்போதும் தலையிட்டது இல்லை என்றும் அன்வார் கூறினார்.
பிரதமரின் பதிலை ஏற்றுக் கொள்ள முடியாத அவர்கள் தொடர்ந்து சர்ச்சைகளை எழுப்பினர்.
அப்போது புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ராட்ஸி ஜிடின் , அன்வாரை வசைபாடினார். அப்போது மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் ராட்ஸியைப் பாதுகாக்க எழுந்து நின்றபோது மக்களவையில் கூச்சல் ஏற்பட்டது.
அப்பொழுது ராட்ஸி சத்தமிட்டு, அவையில் அவதூறான வார்த்தைகளை பேசியதால் மக்களவையில் இருந்து வெளியேறுமாறு நாடாளுமன்ற சபாநாயகர் உத்தரவிட்டர்.
ராட்ஸி வெளியேறியதை தொடர்ந்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களவையில் இருந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.