கோத்தா கோலா மூடாவில் இரண்டு மாடிக்கடை தீப்பிடித்ததில் இருவர் மரணம் ; ஒருவரைக் காணவில்லை

சுங்கை பட்டாணி:

ஜாலான் சுங்கை எமாஸ், கோத்தா கோலா மூடாவில் உள்ள இரண்டு மாடி கடையின் 8 அலகுகள் இன்று தீப்பிடித்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீ விபத்தில் சிக்கிய முதல் உடல் அதிகாலை 3.19 மணிக்கும், இரண்டாவது உடல் காலை 6 மணிக்கும் கண்டெடுக்கப்பட்டது என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) கெடா மாநில இயக்குநர், Awang Hidzel Awang Bujang கூறினார்.

“இந்த சம்பவத்தில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் இரண்டு பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், மற்றொருவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை நடந்து வருகிறது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

முன்னதாக, அதிகாலை 1.12 மணிக்கு தீ விபத்து குறித்து தமது துறைக்கு அழைப்பு வந்தது என்றும், அதைத் தொடர்ந்து, திகாம் பத்து மற்றும் கோத்தா கோலா மூடாவின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்தும் உறுப்பினர்கள் கொண்ட குழு குறித்த இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here