லிம்பாங்:
கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையைத் தொடர்ந்து, லிம்பாங்கில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கம்போங் பாரு, மெடாமிட்டில் இருந்து மொத்தம் 178 பேர் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 20) நிவாரண மையத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.
நேற்று மாலை 4.30 மணிக்கு, 61 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டது என்று, லிம்பாங் மாவட்ட குடிமைத் தற்காப்பு அதிகாரி, லெப்டினன்ட் மிர்வான் ஷா மஸ்ரி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.









