“பினாங்கிலிருந்து என் பழைய நண்பர்கள் ” -ஹம்சா

கோலாலம்பூர் :

லாரூட்டின் நாடாளுமன்ற உறுப்பினரும் பெரிக்காத்தான் நேஷனல் கட்சி செயலாளருமான ஹம்சா, தனது முகநூல் பக்கத்தில் மூன்று முன்னாள் DAP தலைவர்களுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு ‘பினாங்கிலிருந்து பழைய நண்பர்கள்’ என்ற தலைப்பில் குறித்த படத்தை பதிவேற்றினார்.

அதைத் தொடர்ந்து, இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் உட்பட பல்வேறு எதிர்மறையான கருத்துக்களும் வந்தன.

இதற்கு பதிலளித்த பேராசியர் ராமசாமி, தான் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலம் முதல் ஹம்ஸாவும் தானும் நல்ல நண்பர்கள் என்றும், இந்த சந்திப்பு வழமையானது என்றும் அவர் கூறினார்.

சதீஸ் முனியாண்டியைத் தவிர, குறித்த படத்தில் இருக்கும் இரண்டு முன்னாள் தலைவர்கள் பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் II, பேராசிரியர். டாக்டர். பி.ராமசாமி மற்றும் முன்னாள் பத்து காவான் DAP கிளை தலைவர் டேவிட் மார்ஷல் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here