சிலாங்கூர் கூட கோலாலம்பூரை கேட்கலாம்; பினாங்கை கேட்கும் சனுசிக்கு சிவநேசன் பதிலடி

பேராக் சட்டமன்ற உறுப்பினர் கோலாலம்பூரை சிலாங்கூருக்குத் திரும்பப் பெறுவதற்கான அழைப்பினை விடுத்திருக்கிறார். அது பினாங்கை மீண்டும்  கெடாவுடன் ஒருகிணைக்கும் அழைப்பை மீண்டும் எழுப்புவதாகக் கூறினார்.

சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் ஏ சிவநேசன், இது போன்ற அழைப்புகள் கெடா மந்திரி பெசார் சனுசி போன்ற கட்சியினர் மட்டும்தான் பினாங்கு கெடாவிற்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது என்றார்.

இதர பல விஷயங்களை மக்கள் நலனுக்காக எழுப்பலாம். அப்படி ஒரு முன்மொழிவை எழுப்பியிருக்கக் கூடாது. இது பினாங்கு கெடாவுக்குத் திரும்ப வேண்டும் என்று பெரிக்காத்தான் தேசியத் தலைவர்கள் விடுத்த அழைப்பைப் போன்றது. எதிர்காலத்தில் இதுபோன்ற முன்மொழிவுகள் அல்லது அறிக்கைகளை நீங்கள் முன்வைக்கும் போது கவனமாக இருக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன் என்று சிவநேசன் கூறியதாக மலேசியாகினி மேற்கோளிட்டுள்ளது.

பிகேஆரின் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ செயன் சுங் சமீபத்தில் கோலாலம்பூரை சிலாங்கூருக்குத் திருப்பி தந்து “மெகா பெருநகரத்தை” உருவாக்கவும், கிள்ளான் பள்ளத்தாக்கில் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் அழைப்பு விடுத்தார்.

சிலாங்கூரின் முன்னாள் மாநிலத் தலைநகரான கோலாலம்பூர், 1974 இல் ஒரு கூட்டாட்சிப் பிரதேசத்தை உருவாக்குவதற்குக் கொடுக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கெடா மந்திரி பெசாராக அவர் பொறுப்பேற்றதிலிருந்து, பினாங்கு கெடாவிலிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட வேண்டும் என்று சனுசி வலியுறுத்தினார்.

கெடாவின் உரிமைகளை மீட்டெடுக்க பினாங்கின் உரிமை பற்றிய வரலாற்றுக் கதை சரி செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார். பிரதமர் அன்வார் இப்ராஹிம் சனுசியின் கூற்றுக்களை நிராகரித்துள்ளார். நாட்டின் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பை மந்திரி பெசார் புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here