மண்சரிவு காரணமாக குபு காஜா – சும்பிடான் சாலை தற்காலிகமாக மூடப்பட்டது

ஈப்போ:

ஜாலான் குபு காஜா-சும்பிடான் (ஜாலான் ஏ021) சாலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக லாரூட் மாடாங் மற்றும் செலாமா மாவட்டத்தில் பிரிவு 25 முதல் பிரிவு 33 வரையிலான சாலை ஒரு வாரத்திற்கு மூடப்படும்.

இந்த சாலை மூடல் அக்டோபர் 3 வரை அமலில் இருக்கும் என்று பேராக் பொதுப்பணித்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

“மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம். கம்போங் சும்பிடான் மற்றும் கம்போங் மசூதியை இணைக்கும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாக ” பேஸ்புக்கில் பதிவேற்றிய அறிவிப்பில் கூறியுள்ளது.

இதற்கிடையில், குபு கஜா மாநில சட்டமன்ற உறுப்பினர் கலீல் யஹாயா தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் மூலம் புக்கிட் சும்பிடான் இஜோக்-லெங்காங் சாலை நிலச்சரிவு காரணமாக மூடப்படும் என்றும், சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து சாலைப் பயனாளிகளும் தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல மாற்று வழிகளைக் கண்டறியுமாறு” பேஸ்புக்கில் பதிவேற்றிய காணொளியில் அவர் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here