பாரிஸ்:
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ESA) தனது சமூக வலைதள பக்கத்தில் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில் இரவும், பகலும் சரிபாதியாக பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், “குளிர்காலம் வருகிறது… சூரியன் பூமத்திய ரேகையைக் கடந்ததால், வடக்கு அரைக்கோளத்தில் இலையுதிர் உத்தராயணத்தைக்(Autumn Equinox) குறிக்கும் வகையில் இரவும், பகலும் பாதியாக பிரிக்கப்பட்டுள்ளன” என்று பதிவிடப்பட்டுள்ளது.