பழ வியாபாரி கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் உள்ளிட்ட 13 வெளிநாட்டினர் கைது

தாமான் OUG இல் உள்ள ஒரு வீட்டின் முன் கத்தியால் செவ்வாய்கிழமையன்று குத்திக் கொல்லப்பட்ட பழ வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணையில் உதவ 13 வெளிநாட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இன்று முற்பகல் 11 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த வழக்கின் மூளையாகச் செயற்பட்டவர் உட்பட 22 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோர், போலீசார் முக்கிய சந்தேக நபரைக் கைது செய்து பல வழக்குப் பொருட்களைப் பறிமுதல் செய்ததாகக் கூறினார். 48 மணி நேரத்திற்குள் அனைத்து சந்தேக நபர்களையும் போலீசார் கைது செய்தனர் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, Taman OUG இல் உள்ள இரண்டு மாடி வீட்டின் முன் 80 வயது பழ விற்பனையாளர் ஒருவர் பல கத்திக் காயங்களுடன் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இரவு 7.40 மணியளவில் MERS 999 என்ற அவசர அழைப்பைப் பெற்றவுடன் ஒரு போலீஸ் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது. அத்துடன் 29 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு வெளிநாட்டு ஆண் சந்தேக நபர்களையும் நேற்று கைது செய்துள்ளனர். மேலும் கருத்து தெரிவித்த அவர், குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின்படி விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் அக்டோபர் 4 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here