BAeK PTPTN திட்டம் மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவி

உயர்கல்வி வாய்ப்பை விரிவுபடுத்தும்

பிடிபிஎன் என்பதும் தேசிய உயர்கல்வி நிதியகமும் உயர்கல்வி அமைச்சின் கீழ் செயல்பாடு செய்யும் உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து பக்கபலமாக இருந்து வருவதில் முனைப்புக்காட்டி வருகிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக பொது உயர்கல்வி மையங்களில் கல்வியைத் தொடர முடியாமல் எந்த மாணவரும் விட்டுவிடக் கூடாது என்பதில் பிடிபிஎன் முனைப்புக் காட்டிவருகிறது.

அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப உயர்கல்வி வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படுகின்றன. போட்டித்தன்மையுள்ள மனித மூலதனத்தை மேம்படுத்துவதிலும் அது முனைப்புடன் செயல்படுகிறது. உயர்கல்விக் கழகங்களில் கல்வி கற்கும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 5,800 மாணவர்களுக்கு பிடிபிஎன் இலவசக் கல்வி திட்டமும் உபகாரச் சம்பளமும் கொண்டு வரப்படுகிறது என்று பிரதமர் 2025 அக்டோபர் 10ம் தேதி 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அறிவித்தார்.

இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு 120 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் 2026 – 2035ம் ஆண்டுக்கான மலேசிய உயர்கல்வி திட்டத்தின் கீழ் இந்த சலுகைகளைப் பெறக்கூடிய ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக உயர்த்தப்பட்டது என்று பிடிபிஎன் வெளியிட்ட அறிக்கை கூறியது. ஏழை மாணவர்களுக்காகவும் பரம ஏழை மாணவர்களுக்காகவும் உபகாரச் சம்பளம் வடிவில் BAeK PTPTN எனும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் அனாக் இ-கேஸ் பிடிபிஎன் உபகாரச் சம்பளம் எனும் திட்டமாக அமைந்திருக்கிறது.

2026ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி பொது உயர்கல்விக் கழகங்களில் டிப்ளோமா அல்லது இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொள்வோருக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.

25 வயதிற்கும் மேற்போகாத மலேசிய பிரஜைகளான மாணவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுகிறது. அவர்கள் பிடிபிஎன்னில் பதிவு செய்திருக்க வேண்டும். எஸ்எஸ்பிஎன் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.

பிடிபிஎன் பாக்கி கடன் தொகையை வைத்திருக்கக் கூடாது என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது. மை பிடிபிஎன் ஆப்பேக்கத்தின் வாயிலாக பிடிபிஎன் கடன் உதவிக்கு மனுச் செய்வதன் அடிப்படையில் இந்தச் சலுகை வழங்கப்படும். கடன் உதவி மனு அங்கீகரிக்கப்பட்ட கடிதம் கிடைத்த தேதியிலிருந்து 14 நாட்களுக்குள் மாணவர்கள் எந்த பிடிபிஎன் முகப்பிடங்களுக்கும் சென்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

டிப்ளோமா கல்விக்கு ஆண்டுக்கு 4,750 ரிங்கிட் உபகாரச் சம்பளம் வழங்கப்படும். லிகிஜியத்திற்கான இளங்கலைப் பட்டப் படிப்பிற்கு 6,180 ரிங்கிட்டும் அறிவியல் இளங்கலைப் பட்டப்படிப்புக்கு 6,650 ரிங்கிட்டும் வழங்கப்படும்.

நேற்று இத்திட்டத்திற்கான உபகாரச் சம்பளம் வழங்கும் நிகழ்ச்சி ஜொகூரில் நடைபெற்றது. உயர்கல்வி அமைச்சர் டத்தோஃ சேரி அப்துல் காதிர், பிடிபிஎன் தலைவர் டத்தோஃ நூர்லிஸா அப்துல் ரஹீம், பிடிபிஎன் நிர்வாகத் தலைவர் அப்கம் தஃரூக்கி அப்துல் மஜித், ஜொகூர் மாநில பிடிபிஎன் இயக்குநர் புவான் மஸ்னி பிந்தி ருஸ்லான் ஆகியோரும் இதில் பங்கெடுத்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here