மகளிர் அதிகாரத்துவ அதிகரிப்பு சிறந்த எதிர்கால நலனுக்கு உத்தரவாதம்

வளமான எதிர்காலத்திற்கான அடித்தளத்திற்கு மகளிர் சக்தி ஊக்கம் பெற வேண்டும். “மலேசியாவில் 1995ஆம் ஆண்டு மகளிருக்கு எதிரான அனைத்து வகை பாகுபாடுகளையும் அகற்றும் (CEDAW) மாநாட்டில்” குறிப்பிடப்பட்டதைப் போல, மகளிருக்கான நியாயங்கள் கிட்டுவதிலும் அவர்களின் உரிமையைப் பெற்றுத் தருவதிலும் மட்டுமே அவர்களுக்கான அதிகார வரம்புகள் வரையறுக்கப்பட்டுவிடக் கூடாது.

மாறாக மகளிரின் தனிப்பட்ட, சமூகம் சார்ந்த, தேசிய அளவிலான அதிகாரங்களை வலுவாக்கும் வியூகங்களுக்கு ஏற்புடைய ஆதாயங்களை அது மிக அதிகமாக ஏற்படுத்துகிறது. மகளிர் அதிகாரங்கள் என்று கூறப்படும் அடிப்படைக் கூறுகளினாலேயே அவர்களின் மகத்தான சக்திகளும் திறன்களும் முடுக்கி விடப்பட்டுவிடுகின்றன என்று கூறிவிட முடியாது.

நுட்பச் சவால்களுக்கு தனித்துவம் வாய்ந்த அணுகுமுறைகள் அவசியம்

மகளிருக்கான அதிகாரங்களை வரையறுப்பதில் பிற நாடுகளைப் போலவே மலேசியாவும் நுட்பமான பல சவால்களை எதிர்நோக்குகிறது. அரசாங்கம், தனியார் துறைகள், பொது அமைப்புகள், சமூக அமைப்புகள் போன்ற பல நிலைகளை உட்படுத்திய அணுகு முறைகள் மகளிர் அதிகாரங்களை வரையறுப்பதில் இன்றியமையாதவையாகின்றன. பன்முக கலாச்சாரப் பின்னணி, பலதரப்பட்ட சமயப் பண்புகள், தொன்று தொட்ட பாலினப் பங்களிப்பு என்று பலவாறான அமசங்கள் பல சமூகங்களில் ஆழமானதோர் அம்சத்தை இதன் அடிப்படையில் தோற்றுவித்திருக்கின்றன.

பராமரிப்பாளர்கள் என்ற அடிப்படையில், பல தருணங்களில் அதிகாரத்துவ நிலைப்பாடுகளில் ஆண்களுக்கு நிகரான வாய்ப்புகளைப் பெறுவதில் பெண்களின் அதிகாரத்துவம் சுணக்கமடைகிறது. எனினும் 2030ஆம் ஆண்டுவாக்கில் முதியோர் அதிகரிக்கும் நாடாக மலேசியா உருவாகும் சாத்தியத்தில் பராமரிப்புப் பணிகளுக்கான தேவைகள் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சவால்களை எல்லாம் வாய்ப்புகளாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான நுட்பமான அணுகுமுறைகள் மிக அவசியம்.

மகளிருக்கான பொருளாதார வாய்ப்புகள் திறக்கப்பட வேண்டும்

மலேசியாவின் அனைத்து நிலையிலான கல்வி பிரிவுகளிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் அடைவுநிலையே மிக அதிகமாக சிறப்பு தேர்ச்சியைப் பதிவு ஙெ்ய்கிறது. கல்வி தேர்ச்சி விகிதங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் உள்நாட்டு அரசாங்கப் பொது கல்விக் கழகங்களில் கல்வி பயில்வோரின் மொத்த எண்ணிக்கையில் பெண்களின் தொகை 61 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் அதற்குகந்த வேலை வாய்ப்புகளில் பெண்களின் எண்ணிக்கை இன்னும்கூட சரிநிகர் சமநிலையை எட்டவில்லை. மலேசிய புள்ளிவிவரத் துறையின் அடிப்படையில் கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டின் வேலைத் துறைகளில் ஆண்களின் பங்களிப்பான 81.9% உடன் ஒப்பிடுகையில் பெண்களின் பங்கு 55.8% மட்டுமே. ஆண் பெண் வேற்றுமையின் அடிப்படையிலான பிற புறத் தொழில்துறைகளில் ஆண்களின் விழுக்காடு 69.6% , பெண்களின் விழுக்காடு 30.4%.

சம்பள முறையிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகப் பெரிய வேற்றுமைகள் காணப்படுவது வேதனைக்குரியது. 2023ஆம் ஆண்டு, முதல் காலாண்டுக்கான தொழிலாளர் ஊதியத் துறையின் புள்ளிவிவர அறிக்கையின் வாயிலாக இது அறியப்படுகிறது. ஆண் பணியாளர்கள் நீண்ட நேரம் பணியிடத்தில் வேலை பார்க்கின்றனர். ஆனால் பெண்களோ குடும்பத்தையும் பிள்ளைகளையும் கவனிக்கும் பொறுப்புக்காக எவ்வளவுக்கு எவ்வளவு விரைந்து வேலையிடத்திலிருந்து வெளியேற முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு அங்கிருந்து வெளியேறி விடுகின்றனர். பொருளாதாரத் துறைகளிலும் தொழில்சார் நிலைகளிலும் மகளிரின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய புதிய கொள்கைகளும் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

பெண்களுக்கான அதிகாரத்தை அதிகரிப்பது தேசியக் கொள்கையாகும்

கடந்த ஜூலை மாதத்தில் 12ஆவது மலேசிய திட்டத்தின் மத்திய கால அடைவுநிலைகளை அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஆள்பலத் துறைகளில் பெண்களின் நிலைப்பாட்டை 60 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்பது மடானி பொருளாதாரத் திட்டத்தில் முக்கிய அம்சமாக விளங்குகிறது என்று குறிப்பிட்டார். ஒற்றுமை அரசாங்கத்தின் கீழான மடானி பொருளாதாரக் கொள்கையில் தொழில்துறைச் சந்தை வாய்ப்புகளில் மகளிரின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றார் அவர். குடும்ப பராமரிப்புத் தேவைகளின் தரத்தை உயர்த்துவதற்கு இது இன்றியமையாததாக விளங்குவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

பெண்களின் அதிகாரத்தை
ஊக்குவிப்பதற்கான வழிவகைகள்

* கல்வி , நிர்மாணிப்பு ஆற்றல்
* பொருளாதார அதிகாரம்
* தலைமைத்துவப் பிரதிநிதித்துவம்
* வேலையிடங்களில் ஆண் பெண் இருபாலரின் சரிநிகர் விகிதாச்சாரம்
* பாலினம் சார்ந்த வன்முறைகளைக் கையாளுவது
* ஆதரவளிக்கக்கூடிய கொள்கைத் திட்டங்கள்

போன்ற அமசங்களின் வாயிலாக மகளிரின் அதிகாரத்தைச் சமநிலைப்படுத்துவது. அனைத்து பெண்களுக்கும் தரமான கல்வி வாய்ப்புகளும் பயிற்சிகளும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். தொழில் துறைகளில் அதற்கான திறன் வாய்ப்புகளுக்காக பலதரப்பட்ட பயிற்சிகள் சமூக நலத்துறையின் வாயிலாக வழங்கப்படுகிறது. ஆண் பெண் சரிநிகர் வாய்ப்புகள் பற்றிய கல்விமுறையும் இதற்காக வலுப்படுத்தப்படும். சரிநிகர் வாய்ப்புகளைப் பெண்களுக்கு உருவாக்குவதில் பொருளாதாரம் இன்றியமையாததாக விளங்குகிறது. ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும் பொருளாதார வாய்ப்பின் மூலம் ஒரு சமுதாயமே பயனுறும். பொருளாதார வளப்பங்கள் அதிகரிக்கப்படுவதன் வழி பெண்களின் தொழில்துறை வாய்ப்புகளும் பெருகும். பல்வேறு வகைகளில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகள் 2030 தேசிய தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. 2030ஆம் ஆண்டுவாக்கில் தொழில்திறனில் சிறப்பான வளர்ச்சி பெற்ற நாடாக மலேசியாவை உருவாக்குவதில் பெண் தொழில்முனைவோர் பங்களிப்பு இன்றியமையாததாக விளங்கும்.

பெண்களின் அதிகார ஆற்றல் பெருகுவதன் வாயிலாக முக்கிய விவகாரங்களில் முடிவெடுப்பதற்கான அவர்களின் தலைமைத்துவ ஆற்றல் விரிவடைகிறது. அதன் அடிப்படையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்புகளை வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்ததன் தொடர்பில், குறிப்பாக தனியார் துறைகள், உயர் கல்விக்கழகங்கள், அரசாங்கத் துறைகளில் 2022ஆம் ஆண்டில் சிறந்த அடைவுநிலைகள் எய்தப் பெற்றிருக்கின்றன. வாரிய உறுப்பியங்களிலும் பெண்களின் விழுக்காட்டை 30 விழுக்காடாக உயர்த்த இது வித்திட்டிருக்கிறது, புர்சா மலேசியா பங்குச் சந்தையில் 100 முதன்மை அதிகாரத்துவ பொறுப்புகளில் தற்போது முக்கிய இடங்களை 30 விழுக்காட்டு தலைமைத்துவப் பொறுப்புகளைப் பெண்கள் கொண்டுள்ளனர்.

வேலை இடங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதென்பது, வெறும் எண்ணிக்கையினால் ஈடுஙெ்ய்யக்கூடிய விவகாரமல்ல. பெண்கள் தங்களது தனித்துவமிக்க திறமைகளைப் புலப்படுத்துவதற்கான ச்ரியான களங்கள் அமைத்துத் தரப்பட வேண்டியது இதில் முக்கியமாகும். வேலை இடங்களில் பணியாளர்கள், சமூகங்களைச் சார்ந்த அமைப்புகளின் வாயிலாக சிறந்த பங்குதாரர்களை ஏற்படுத்துவது இதில் மிக முக்கியமானதாகும். வேலை பார்க்கும் இடங்களில் குழந்தைப் பராமரிப்பகங்களை ஏற்படுத்துவதற்கான நிதியுதவிகள், அதற்கான விண்ணப்பங்கள் போன்றவற்றிற்கான ஒத்துழைப்புகளுக்கு இந்தப் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். பிரசவ விடுமுறையை 98 நாட்களாக உயர்த்துவது, பெற்றோரியல் விடுப்புகள், பிள்ளைகளைப் பராமரிக்கக் கூடிய சூழலில் உள்ள மகளிருக்கு ஏதுவான வேலை நேரத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவை இதில் அடங்கும்.

பாலின ரீதியிலான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும். அதற்குரிய சட்டவிதிகள் அவசியம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பெண்கள் வேலை இடங்களில் எதிர்நோக்கும் பல்வேறு தாக்கங்களைக் கையாள மகளிர் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ‘MATAHARI’, ‘IRIS’ போன்ற சட்ட ஆலோசக அமைப்புகளின் சேவைகள் பெருக வேண்டும். வேலை இடங்களில் பெண்களின் மனநல விவகாரங்களுக்கான ஆலோசனைகளுக்காக கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி ‘Heal 15555’ என்ற சிறப்பு தொலைபேசி சேவைப் பிரிவும் இயங்குகிறது.

பெண்களின் ஆக்ககரமான தொழில்துறை பங்களிப்புகளுக்கு பரிவு பொருளாதாரத் துறை மிக அவசியம். மகளிரின் தொழில்துறை சேவைகளைப் பெருக்குவதில் அவர்களுக்கான தரமான அடிப்படை வங்திகள் மேலோங்கச் செய்யப்பட வேண்டியது இன்றியமையாதது. மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் அண்மையில், மகளிர் சார்ந்த 22ஆம் ஆசியான் மாநாடு நடைபெற்றது.

செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரையில் நடைபெற்ற மகளிர் சிறார் உரிமைகள் நலம் சார்ந்த இணைய மாநாட்டில் இதுபற்றிய பல்வேறு கூறுகளில் கருத்துகள் முன் வைக்கப்பட்டன. ‘சிறந்த எதிர்காலத்திற்கு மகளிர் அதிகாரம்’ என்ற கருப்பொரு ளில் நடைபெற்ற இந்த இணைய மாநாட்டிற்கு மகளிர் குடும்ப saமூக மேம்பாட்டுத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் மஸியா சே யூசோப் தலைமையேற்றார்.

மகளிருக்கு அதிகாரம் வழங்கப்படுவதென்பது வெறும் கனவாகிப் போகும் விவகாரமல்ல, சிறந்த எதிர்காலத்திற்கு அது மிக அத்தியாவசிய அம்சமாகும். உலக அரங்கில் இதன் அடிப்படையில் பெண்கள் பல்வேறு பங்களிப்பை ஆக்கப்பூர்வமாக வழங்கி வருகின்றனர். இதில் பெண்களின் முன்னேற்றம் மட்டுமே அடங்கி இருக்கவில்லை. மடானி பொருளாதாரத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வியூகங்களில் நாட்டின் பொருளாதாரத் துறையின் வளப்பமும் அடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here