மோட்டார் சைக்கிளோட்டியை மோதி தள்ளிய வாகனமோட்டி தலைமறைவு

கோலாலம்பூர்: ஜாலான் கோம்பாக்கில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை மோதி தள்ளிய நிசான் அல்மேரா ஓட்டிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநரை  போலீசார் அவரை தேடி வருகின்றனர். சம்பபத்திற்கு பிறகு சில வாகனமோட்டிகள் அவரை துரத்தி சென்ற காணொளி வைரலானது.

மாநகர போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) துணைத் தலைவர் சுல்காஃப்லி சே லா கூறுகையில், விபத்துக்குள்ளான ஓட்டுநர் இதுவரை புகார் அளிக்க முன்வரவில்லை. சம்பவத்தில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.

ஓட்டுநரை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர் தலைமறைவாகிவிட்டார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.

முன்னதாக, தாமான் ஸ்ரீ கோம்பாக்கிலிருந்து செந்தூல் பாயிண்ட் நோக்கி ஜாலான் கோம்பாக் வழியாக நிசான் அல்மேராவை வாகன ஓட்டிகள் துரத்திக் கொண்டிருந்தபோது, ​​ஓட்டுநர் திடீரென மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றதாக ஊடகங்கள் தெரிவித்தன.

இரண்டு நிமிடம் 19 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் வைரலானது. நடு சாலையில் நிறுத்தும் முன் ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. அவர் நிறுத்த மறுத்ததால், மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குழு காரை துரத்தியது. சாலையோர கடையொன்றில் மது அருந்தியதற்கு பணம் தர மறுத்த இளைஞர்கள் காரில் ஏறி வேகமாக சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here