பள்ளியின் கோல் கம்பம் தலையில் விழுந்ததால் 11 வயது மாணவன் பலி

சரவாக், பிந்துலுவில் கோல் கம்பம் உடைந்து அதன் ஒரு பகுதி தலையில் விழுந்ததால் 11 வயது பள்ளி மாணவன்  உயிரிழந்தான். இந்த சம்பவம் நடந்தபோது அவர் எஸ்கே செயின்ட் அந்தோணி தொடக்கப்பள்ளியில் தனது வகுப்பு தோழர்களுடன் இணை பாடத்திட்ட நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்தபோது இச்சம்பவம் நிகந்தேறியது.

பிந்துலு காவல்துறைத் தலைவர் Bartholomew Umpit, சிறுவனுக்கு கோல் கம்பத்தின் ஒரு பாகம் விழுந்ததால் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகக் கூறினார். இது இணை பாடத்திட்டத்தின் போது உடைந்ததாக நம்பப்படுகிறது என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

பிந்துலு மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி அஹ்மத் அமீர் யூப் பஹாரியை 013-5653756 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது பிந்துலு போலீஸ் செயல்பாட்டு அறையை 086-318304 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here