கை,கால் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் ஆடவரின் உடல் கண்டெடுப்பு

பாலிங்:

கோலாக்கெட்டில் தாமான் டேசா பிடாராவில் உள்ள ஒரு வீட்டில், நேற்று 71 வயது முதியவர் கால், கை கட்டப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சுயநினைவற்ற நிலையில் இந்திய முதியவர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து பொதுமக்களிடமிருந்து காவத்துறைக்கு தகவல் கிடைத்ததாக பாலிங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஷம்சுதின் மாமட் கூறினார்.

சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில், குறித்த முதியவர் இறந்ததுவிட்டார் என்று சம்பவ இடத்திலிருந்த மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது. இறந்தவர் வீட்டின் பிரதான அறையில் படுக்கையில் காணப்பட்டார். அவரது வீட்டில் கண்காணிப்பு கேமரா இருக்கவில்லை.

இருப்பினும் பாதிக்கப்பட்டவரின் அண்டை வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் விளைவாக, இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இருண்ட நிற யமஹா Y15 மோட்டார் சைக்கிளில் அவரின் வீட்டை விட்டு வெளியேறும் படங்கள் இருப்பது கண்டறியப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி இறந்த பின்னர், வீட்டில் தனியாக வசித்து வந்ததாக ஷம்சுதீன் தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்டவரின் உடைமைகள், அதாவது தங்கச் சங்கிலி, அவர் அணிந்திருந்த மோதிரம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் பணப்பை என்பவற்றை காணவில்லை எனக்
கண்டறியப்பட்டது.

“முதற்கட்ட விசாரணையின் முடிவுகள் அடிப்படையில், கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது, கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின்படி விசாரணை நடத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

“மரணத்திற்கான காரணத்தை அடையாளம் காண உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here