இரண்டு இழுவை வாகன ஓட்டுநர்களிடையே தகராறு குறித்து போலீசார் விசாரணை

செராஸில் இன்று திங்கள்கிழமை அதிகாலையில், விபத்தில் சிக்கிய கார் தொடர்பில்  இரண்டு இழுவை வாகன ஓட்டுநர்களிடையே இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜாம் ஹலீம் ஜமாலுடின் கூறுகையில், கம்போங் மலேசியா தம்பஹானில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அதிகாலை 1.37 மணியளவில் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கார் சம்பந்தப்பட்ட விபத்துக்குப் பிறகு இந்த சம்பவம் தொடங்கியது. ஒரே வாடிக்கையாளருக்காக இரண்டு இழுவை டிரக் ஓட்டுநர்களின் இடையேயான வாக்குவாதம் பின்னர் சண்டையாக மாறியது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். இந்த சண்டையில் ஆயுதங்களும் இருந்தன.

அதைத் தொடர்ந்து, காலை 11.15 மணியளவில், சண்டையில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 22 முதல் 44 வயதுடைய எட்டு மலேசியர்களை போலீசார் கைது செய்தனர். இன்னும் பல சந்தேக நபர்களை தேடி வருவதாகவும், இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஜாம் ஹலீம், கலவரத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 148 ஆவது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார். இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here