ஐபோன் சந்தை வீழ்ச்சி! கூகுள் பிக்சல் பெரும் ஏற்றம்! ஜப்பானில் மாற்றம்

ஸ்மார்ட்போன் என்றாலே ஐபோன் தான் என்ற நிலையில் உலக நாடுகளில் மாற துவங்கியது, இதற்கு முக்கியமான காரணம் ஐபோன்களில் கடந்த 4- 5 வருடத்தில் பெரிய அளவிலான மாற்றங்களும், புதுமைகளும் இல்லாதது தான்.

மக்களை வியக்க வைக்கும் வகையில் எவ்விதமான புதமைகளும் இல்லாத போதிலும் ஐபோன்களின் விலை தொடர்ந்து உயர்வாகவும், ப்ரோ மாடல்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க துவங்கியுள்ளது.   இதில் கடுப்பான மக்கள் மாற்று தேர்வுகளை தேட துவங்கிய வேளையில் சாம்சாங், கூகுள் பிக்சல், ஹூவாய் போன்கள் முக்கிய தேர்வாக உள்ளது. ஏற்கனவே மக்கள் ஆப்பிள் பொருட்களை கடுமையாக விமர்சனம் செய்ய துவங்கியுள்ள வேளையில் சமீபத்தில் வெளியான ஐபோன்களில் கூட கவரும் வகையில் எவ்விதமான புதுமைகளும் இல்லை.

இந்த நிலையில் தான் ஆப்பிள் சிஇஓ டிம் குக் அதிர்ச்சி அடையும் வகையிலும், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை குத்தாட்டம் போடும் வகையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஜப் பானில் ஆப்பிள் ஐபோன் சந்தையை கூகுள் பிக்சல் காலி செய்து வருகிறது, ஐபோன் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் தங்களுடைய விருப்பத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் காலாண்டு முடிவில் ஜப்பான் நாட்டின் கூகுள் பிக்சல் போன் சந்தை மதிப்பீடு 12 சதவீதமாக உள்ளது, இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சுமார் 6 மடங்கு உயர்ந்துள்ளது என கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் டேட்டா கூறுகிறது.

இதே காலக்கட்டத்தில் ஐபோன் சந்தை பங்கீடு 58 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக குறைந்துள்ளது. ஆப்பிள், கூகுள் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் ஜப்பான் மிகவும் முக்கியமான சந்தை ஆப் முதல் கேமிங் வரையில் அனைத்திலும் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜப்பான் விளங்குகிறது.

இதில் முக்கியமாக ஆப்பிள்-க்கு அமெரிக்காவில் எந்த அளவுக்கு ஆதிக்கம் உள்ளதோ இதேபோன்ற ஆதிக்கம் ஜப்பானிலும் உள்ளது. இதனால் ஜப்பானில் வர்த்தகத்தை இழப்பது பெரும் பாதிப்பை ஆப்பிள்-க்கு ஏற்படுத்தும். இதேவேளையில் கூகுள்  புதிதாக சில போன்களை அறிமுகம் செய்ய உள்ளது, இதுமட்டும் ஹிட் அடித்தால் ஆப்பிள் நிறுவனத்தின் வீழ்ச்சியின் ஆரம்பமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here