வேலை நிமித்தமாக 90ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலும் லண்டனில் தங்கியிருந்த சமயம் பொது பல்கலைக்கழகங்களைப் பற்றிய விவரங்களை முதன் முதலாகக் கேள்விப்பட்ட தேவகுமாரன் நாராயணசாமி, மலேசியாவிலும் இதுபோன்ற கல்விக்கழகங்கள் அமைந்தால் நிச்சயமாக அதில் சேர்ந்து உயர்கல்வி வாய்ப்பைப் பெறலாமே என்ற ஆவல் கொண்டார்.
மலேசியப் பொது பல்கலைக்கழகமான Oum, அதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்பதை அறிந்தபோது அந்தக் கனவு நனவாகும் சாத்தியத்தை அவரால் உணர முடிந்தது. மனோவியல் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற தமது லட்சியம் அதன் மூலம் ஈடேறும் என்பதை அவர் கண்டு கொண்டார். தன்னுடைய அவாவைப் பூர்த்தி ஙெ்ய்வதாக மட்டுமல்லாமல், சமூகவியலிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அந்தக் கல்விமுறை அமைந்திருப்பதை அவர் அறிந்துகொண்டார்.
15 வருடங்களுக்கு முன்னர் தமது லட்சிய நோக்கத்திற்காக பீஸ்ஒர்க்ஸ் மலேசியா என்ற மலேசிய அமைதிப் பணி திட்டத்தை அவர் தொடங்கினார். தேவாலயத்தில் சந்தித்த சிலரின் உதவியுடன் அந்தத் திட்டத்தை அவர் ஆர்வத்தோடு ஆரம்பித்தார். அகதிகளுக்கு, புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதோடு பூர்வக்குடி மக்களின் மேம்பாட்டிற்கான செயல்திட்டங்களுக்காகவும் அந்தக் கல்வித் திட்டம் அவசியமானதாக அமைந்துவிட்டது.
விருப்பப்பட்ட துறையில் மீண்டும் கல்வியைத் தொடர்வதற்குண்டான அனைத்து வசதிகளையும் Oum கொண்டிருக்கிறது. இருந்த இடத்தில் இருந்துகொண்டே கல்வி கற்பதற்கான சிறந்த வாய்ப்பை இந்தக் கல்வி மையம் வழங்குகிறது. காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணி வரையில் வேலை பார்க்கக்கூடிய என்னைப் போன்ற பணியாளர்களுக்கு மாலை நேர பாட வகுப்புகளுக்குச் சென்று கல்வி கற்பதென்பது மிகவும் சிரமத்திற்குரிய விஷயமே. நமது விருப்ப நேரத்தின் அடிப்படையில், திறமையான விரிவுரையாளர்களுடன் பாடத் திட்டங்களைப் பற்றிய விளக்கங்களைப் பெறுவதென்பது Oum கல்வித் திட்டத்தில் மிக அனுகூலமான பலன்களைத் தரவல்லதாய் உள்ளது.
அலோர்ஸ்டார் (கெடா), பெர்லிஸ் பயிற்சி மையங்களின் இயக்குநர் பேராசிரியை தே லாய் லிங், பேராசிரியை ராஜலட்சுமி ஆகியோரைத் தமது கல்வி வழிகாட்டிகளாக தேவகுமாரன் குறிப்பிடுகிறார். தமது உயர்கல்வி பயிற்சித் திட்டத்தின் தொடக்கக் காலகட்டங்களில் அவ்விரு பேராசிரியைகளும் தமக்கு மிகுந்த ஆலோசனைகளை வழங்கியதாக அவர் கூறினார். கல்வி கற்பதில் தமக்கிருந்த தடைகளைத் தகர்த்து சரியான பாதையில் தம்மை அவ்விருவரும் வழி நடத்தியதாக தேவகுமாரன் கூறினார்.
ஒவ்வொரு மாணவரும் தங்கள் கல்வித் துறைகளிலும் பயிற்சித் திட்டங்களிலும் எதிர்நோக்கக்கூடிய பலவகையான பிரச்சினைகளைக் களைய சிறந்த ஆசோனைகளையும் திட்டங்களையும் கொண்டு இந்தக் கல்விக்கூடம் இயங்குகிறது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் 26ஆம் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றும் வாய்ப்பு தமக்கு வழங்கப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
5,000 பட்டதாரிகள் கூடியிருந்த அந்தச் சபையில் உரைநிகழ்த்தியதை மிகப் பெருமையாக உணர்வதாக அவர் விவரித்தார். தமக்களிக்கப்பட்ட அந்த வாய்ப்பை தாம் மிக அருமையாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
வயதாக ஆக நமது தொழில்துறைகளில் நாம் பல திறன்களைக் கொண்டு திறமையோடு முன்னேறுகிறோம். குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு கல்வி வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புக்கான சாத்தியத்தை தட் உருவாக்கித் தருகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.