அடுத்தாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த ஜோகூர் மாநில அரசு திட்டம்

சினாய்:

டுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஜோகூர் மாநிலத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று டத்தோ ஒன் ஹபீஸ் காசி தெரிவித்துள்ளார்.

மாநில சட்டமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் 23 ஆம் தேதி ஜோகூர் மாநில பட்ஜெட் 2024 தாக்கல் செய்யப்படும் போது, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பணிகள் குறித்த விவரங்கள் உறுதிச் செய்யப்படும் என்று மந்திரி பெசாரான அவர் கூறினார்.

தஞ்சோங் பியா தேசிய பூங்கா போன்ற சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய பல சுற்றுலாத் தலங்கள் ஜோகூரில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான தெற்கு நுழைவாயிலாக ஜோகூர் பாருவை மாற்ற அரசு விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

சிறப்பு நிதி வட்டாரம், சிறப்புப் பொருளியல் வட்டாரம் போன்ற திட்டங்கள் ஜோகூரில் பொருளாதார விரிவாக்கத்தை ஊக்குவிக்கும் எனவும் இத்திட்டங்கள் மாநிலத்திற்கு அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும் எனவும் ஒன் ஹபீஸ் காசி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here