மசாஜ் நிலையங்களுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்த அலோர் ஸ்டார் கவுன்சில் முடிவு செய்துள்ளது

அலோர் ஸ்டார் நகராண்மை கழகம் நகர எல்லைக்குள் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மசாஜ் நிலையங்களுக்கான உரிமங்கள் வழங்குவதை நிறுத்தியுள்ளது. ஒரு சுருக்கமான முகநூல் பதிவில், ஜூன் 21 அன்று கெடா அரசாங்கத்தின் முடிவின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கவுன்சில் கூறியது.

ஜூன் மாதம் மந்திரி பெசார் சனுசி நோர், மசாஜ் பார்லர்களின் உரிமங்களை புதுப்பிக்காதது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகக் கூறியது. (சில) நிபந்தனைகளுடன் ரிஃப்ளெக்சாலஜி விற்பனை நிலையங்களை மட்டுமே நாங்கள் அங்கீகரிப்போம். ரிஃப்ளெக்சாலஜி மையத்திற்கான உரிமம் இருந்தால், அது உங்கள் கால்களுக்கு மட்டும்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவர் நான்கு மாதங்களுக்கு முன்பு கூறியதாக  சினார் ஹரியான் மேற்கோள் காட்டியிருந்தது.

2020 இல் பொறுப்பேற்றதில் இருந்து, PAS தலைமையிலான மாநில அரசும் 4 இலக்க எண்களுக்கு தடை விதித்துள்ளது மற்றும் மாநிலத்தில் மது விற்பனையை மட்டுப்படுத்தியுள்ளது. மலாய் சமூகம் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் இத்தகைய பானங்கள் விற்பனையை தடை செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here