இஸ்ரேலில் இருந்து பாதுகாப்பாக இந்தியா திரும்பிய நடிகை

39ஆவது ‘ஹய்பா’ சர்வதேச திரைப்பட விழா இஸ்ரேலில் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி கடந்த 7ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாலிவுட் நடிகை நுஷ்ரத் பரூச்சா இஸ்ரேல் சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று காசா பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்த மோதல் காரணமாக திரைப்பட விழாவுக்கு சென்ற நடிகை நுஷ்ரத் பரூச்சா அங்கு சிக்கி இருந்தார். அவர் குறித்த தகவல் தெரியாமல் இருந்தது. அவரை தொடர்பு கொள்ள பாலிவுட் திரை உலகம் பல முயற்சிகளை முன்னெடுத்தது. ஆனால் நுஷ்ரத்தை தொடர்பு கொள்ள முடியாததால் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here