ஈரானில் உள்ள மலேசியர்கள் ஜூன் 20 ஆம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பு- ஃபஹ்மி

கோலாலம்பூர்:

ஈரானிலுள்ள மலேசியர்கள் அனைவரும் வரும் ஜூன் 20-ஆம் தேதிக்குள் நாடு திரும்புவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

ஈரானில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருக்கும் மலேசியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் அல்லது தொழிலாளர்கள் என யாராக இருந்தாலும், ஈரானில் அதிகமான மலேசியர்கள் இல்லை என்று அவர் சொன்னார்.

எனவே அங்குள்ள அனைத்து மலேசியர்களுக்கும் விசா ஏற்பாடுகள் செய்ய அரசு துரிதமாகச் செயல்பட்டு வருவதையும் ஃபஹ்மி உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here