மலேசிய இந்து சங்கம் காஜாங் : மகளிர்களுக்கான ஒரு நாள் பட்டறை 

(Our Reporter எம். அன்பா)
காஜாங்,
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப வீட்டிலிருந்து வருமானம் ஈட்டும் திறன்களை மகளிர் வளர்த்துக் கொள்ள வேண்டும் என மலேசிய இந்து சங்கம் காஜாங் வட்டாரப் பேர வையின்  மகளிர் பிரிவின் தலைவி திருமதி. கன்னிகா செல்வராஜு கூறினார். கைத் தொழில் திறன் மேம்பாட்டு வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பான பட்டறைகள் பெரிதும் உதவுகின்றன.
மலேசிய இந்து சங்கம் காஜாங் வட்டார பேரவையின் மகளிர் பிரிவுத்  தலைமையில் 25 மகளிருக்கான கைத்திறன் பயிற்சியாக சேலையை நேர்த்தியான முறையில் கட்டுவது எப்படி என்கின்ற ஒரு நாள் பட்டறை சிறப்பாக நடைபெற்றது. கைத்தொழில் சார்ந்த தொழில் திறன்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என காஜாங் வட்டார பேரவையின் செயலாளர் திருமதி. கஸ்தூரி கோவிந்தன் தெரிவித்தார்.
இது போன்ற வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். கைத்தொழில் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் மலேசிய இந்து சங்கம் காஜாங் வட்டாரப் பேரவையின்  மகளிருக்காண அனிச்சல் செய்யும் முறை, பூ மாலை தொடுத்தல் மற்றும் பூங்கொத்து பயிற்சி பட்டறை போன்ற பல்வேறு நடவடிக் கைகளில் மகளிர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது என வட்டார பேரவையின் தலைவர் முனைவர் முரளிதரன் பரமசிவம் கூறினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் மத்தியில் மகளிர்களுக்கு வியாபார வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். நேற்று காஜாங்கில் இப் பயிற்சி பட்டறையை பவன் கான்செப்ட் என்டர்பிரைஸ் உரிமையாளர் தாட்சாயணி பரமசிவம் அவர்களால் வழிநடத்தப்பட்டது. இப்பட்டறையில் கலந்து கொண்ட மகளிர் களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டாரப் பேரவையின் துணைத் தலைவர் நடராஜா பொன்னுசேகர் மற்றும் விஜயன் குழந்தை வேலு கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here