தமிழ்ப் படத்தில் நடிக்கும் இந்தியாவின் கூடைப்பந்து வீராங்கனை

கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் ‘ஜென்டில்மேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் பிராச்சி தெஹ்லான்.

இந்திய கூடைப்பந்து அணியின் நட்சத்திர வீராங்கனையாக உள்ளார் பிராச்சி. பல்வேறு அனைத்துலகப் போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தவர்.

 

திடீரென இந்தி தொலைக்காட்சித் தொடரில் நடித்த அவருக்கு மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக ‘மாமாங்கம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், பஞ்சாபி மொழிப் படத்திலும் நடித்தார். தற்போது ‘திரிசங்கு’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில், மரகதமணி இசையமைக்கும் ‘ஜென்டில்மேன்’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார் பிராச்சி.

இப்படத்தில் அறிமுக நாயகி நயன்தாரா சக்ரவர்த்தியும் பிராச்சிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here