அடுத்த 24 மணி நேரத்தில் ஐநா ஊழியர்கள் உட்பட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேற வேண்டும்- இஸ்ரேல்

டுத்த 24 மணி நேரத்தில் ஐநா ஊழியர்கள் உட்பட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

பெய்ரூட்டுக்கு வந்த ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், காசா மீது குண்டுவீச்சு தொடர்ந்தால் போர் “வேறு முனைகளில்” தொடங்கலாம் என்று கூறுகிறார்.

இருப்பினும் இஸ்ரேலின் இந்த எச்சரிக்கையை ஹமாஸ் “போலி பிரச்சாரம்” என்று கூறுகிறது. மேலும் காசாவில் இஸ்ரேல் “இனப்படுகொலை” நடத்தியதாக ஹமாஸ் குற்றம் சாட்டுகிறது.

இந்நிலையில் காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 1,537 பாலஸ்தீனியர்கள் – 500 குழந்தைகள் மற்றும் 276 பெண்கள் உட்பட – கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 6,612 பேர் காயமடைந்துள்ளனர்.

அதேநேரத்தில் இஸ்ரேலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,300ஐ எட்டியுள்ளது என அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here