பேங்காக்:
பேங்காக்கின் சியாம் பாராகான் கடைத்தொகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாய்லாந்து போலீசார் மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் நாடு தழுவிய அதிரடிச் சோதனையில் 1,789 துப்பாக்கிகளும் 75,973 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
3,224 இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனைகளில் 1,593 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து காவல்துறைப் படைத் தலைவர் ஜெனரல் டார்ஸாக் சுக்விமோல் தெரிவித்துள்ளார்.
மேலும் 79 ஃபேஸ்புக் பக்கங்கள், 14 டிக்டாக் கணக்குகள், 148 எக்ஸ், 26 யூடியூப் சேனல்கள், 14 இன்ஸ்டகிராம் கணக்குகள் மூடப்பட்டன.
முன்னர், சியாம் பாராகான் கடைத்தொகுதியில் இளையர் ஒருவர் நடத்திய துப்பாக்கிக் சூட்டில் மூவர் மாண்டனர், நால்வர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.