விஜய் 68வது படத்தின் புதிய அப்டேட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இப்போது இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர்கள் தென் ஆப்ரிக்கா சென்றுள்ளனர்.

இதற்கு பிறகு படப்பிடிப்பு இஸ்தான்புல்லில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மைக் மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, இதனபிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கடந்த மாதத்தில் இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது ஆனால், ‘லியோ’ படம் வெளியாகும் வரை இதுகுறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இப்போது இதன் பூஜை வீடியோவை வருகின்ற ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய தினங்களில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here