மலாக்காவில் இந்திய சமூகத்தினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் – சங்கீதா ஜெயக்குமார் குற்றச்சாட்டு

ரெ. மாலினி:

மலாக்கா:

மலாக்கா மாநிலத்தில் வாழும் இந்திய சமூகத்தினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதுடன், மாநில அரசாங்கம் வழங்கும் உதவித் திட்டங்களின் பயன்களைப் பெறுவதிலும் பல சிரமங்களைச் சந்தித்து வருவதாகப் பக்காத்தான் ஹராப்பானின் மத்திய தேர்தல் செயற்குழு உறுப்பினர் சங்கீதா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், சிறு வணிகர்கள் மற்றும் உதவி தேவைப்படும் பொதுமக்கள் அரசாங்கத்தின் நலத்திட்டங்களைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமின்றி, தற்போதைய மாநில அரசாங்கம் மக்களுக்கான உதவித் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தவில்லை என்றும், பொதுமக்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படாமல் விரயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மாநில அரசாங்கத்தின் உதவிகள் தகுதியான மக்களுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும், குறிப்பாக இந்திய சமூகத்தினர் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தப் பின்னணியில், மலாக்கா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் அவசியம் எனத் தாம் கருதுவதாகத் தெரிவித்த சங்கீதா ஜெயக்குமார், எதிர்வரும் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு மீண்டும் ஆதரவு வழங்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here