மலேசியர்கள் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்த இலங்கை

மாஸ்கோ: மலேசியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டணத்தை இலங்கை அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இலவச விசாக்களை மார்ச் 31 வரை உடனடியாக வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி X (முன்னர் டுவிட்டர் என அழைக்கப்பட்டது) இல் தெரிவித்தார்.

சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டணத்தை நீக்குவதற்கு இலங்கை உத்தேசித்துள்ளதாக இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டின் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதும், அடுத்த சில வருடங்களில் இலங்கையில் வருடாந்தம் ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அடைவதுமே இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கமாகும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here