மழைத் தூறல் பெய்தாலும் பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு சேரும் பெரும் கூட்டம்

கோலாலம்பூர்:

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடந்து வரும் போருக்கு எதிராக பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையாக நிற்கவும், இஸ்ரேலுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தவும் மழையையும் பாராது மலேசியர்கள் மற்றும் பல வெளிநாட்டவர்களும் ஒன்று குடி வருகின்றனர்.

இன்று (அக் 24) புக்கிட் ஜலீலில் உள்ள ஆக்சியாட்டா அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளை நிற ஆடையுடன் கூடியுள்ளனர். இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உரையாற்றவுள்ளார் என்றும் இரவு 9 மணிக்கு அவர் அங்கு வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரங்கிற்குச் செல்லும் வழி நெடுகிலும் கொடிகள், பாலஸ்தீன கொடியின் அடையாளமுள்ள ஷால்கள் விற்கும் பல ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சிலர் பாலஸ்தீனத்தை விடுவியுங்கள் என்ற பதாகைகளை ஏந்தியவாறும் காணப்பட்டனர்.

ஸ்டேடியத்தில், ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது, பலர் கோஷமிடுவதையும் மற்றவர்கள் இஸ்ரேலின் சியோனிச ஆட்சியைக் கண்டிப்பதையும் கேட்க முடிந்தது.

முன்னதாக, பாலஸ்தீனத்திற்கு எதிரான சியோனிச ஆட்சியின் அட்டூழியங்களைக் கண்டிப்பதில் அனைத்து மலேசியர்களும் ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த சக்தியாக வலுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று அன்வார் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here