ஃப்ரெண்ட்ஸ் சீரிஸ் புகழ் நடிகர் மேத்யூ பெர்ரி காலமானார்

ஃப்ரெண்ட்ஸ் சீரிஸ் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற மேத்யூ பெர்ரி உயிரிழந்துள்ளார். இந்த நிகழ்வு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏறபடுத்தி வருகிறது. ஆங்கிலத்தில் வெளிவந்த ஃப்ரெண்ட்ஸ் என்ற வெப் சீரிஸிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த தொடரில் சாண்ட்லர் பிங் என்ற கேரக்டரில் மேத்யூ பெர்ரி நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார். முன்னதாக இந்த வெப் தொடர் 1994 முதல் 2004 ஆம் ஆண்டு வரையில் பிரபல ஆங்கில தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்தது.

மேத்யூ பெரி சில ஹாலிவுட் படங்களில் நடித்திருந்தாலும், ஃப்ரெண்ட்ஸ் இணைய தொடரில் சாண்ட்லர் பிங் என்ற கேரக்டர்தான் அவருக்கு ஓர் அடையாளத்தை கொடுத்தது. உலகம் முழுக்க அவர் பிரபலம் அடைந்திருந்தாலும் அவரிடம் சில தவறான பழக்கங்கள் இருந்து வந்துள்ளன.

குறிப்பாக அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டின் நீச்சல் குளத்தில் உயிரிழந்தார். முன்னதாக அவர் நன்றாக குடித்திருந்ததால் அதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அல்லது சுய நினைவின்றி நீரில் மூழ்கி மரணம் அடைந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here