PTPTN கடனை ரத்து செய்வது குறித்து பேசுவதை நிறுத்துங்கள்; MPகளுக்கு உயர்கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN) கடன்களை ரத்து செய்வது பற்றி பேசுவதை நிறுத்துமாறு  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயர் கல்வி அமைச்சர் காலிட் நோர்டின் வலியுறுத்தியுள்ளார். 3.86 மில்லியன் கடன் வாங்குபவர்களின் கடனை ரத்து அங்க  முடியாது. இது செப்டம்பர் 30 ஆம் தேதியின்படி 70.48 பில்லியன் ஆகும்.

PTPTN கடன்களை ரத்து செய்வது நிதித் தாக்கம் வெறும் காகித இழப்பு அல்ல. கடன்களை நீக்குவதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும்  என்று அவர் மக்களவையில் கூறினார். கடன் அளவு பெரியதாக இருப்பதால், அரசாங்கத்தால் அதைச் செய்ய முடியாது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்னையை எழுப்புவதை நிறுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு முறை எழுப்பப்படும் பதிலையே தான் சொல்வதாகவும் அவர் கூறினார்.

எந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையும் ஒற்றுமை அரசாங்கத்தின் கடமையாகக் கருதப்படக் கூடாது என்றார் காலிட். ஒற்றுமை அரசாங்கம் பக்காத்தான் ஹராப்பான் அல்லது பாரிசான் நேஷனல் அல்ல என்று அவர் கூறினார். முன்னதாக, பிரதமர் அன்வார் இப்ராஹிம் PTPTN கடன்களை திரும்ப பெறுவது சவாலாகவே உள்ளது என கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here