கோலாலம்பூர்: பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவை உறுதியளித்த பிறகு, காவல்துறை மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யும். இந்த நால்வருக்கும் அச்சுறுத்தல் அல்லது அவர்களின் ஆதரவிற்கு ஈடாக வளர்ச்சி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கட்சியின் தலைவர் முஹிடின் யாசின் கூறினார். இது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தை மீறுகிறது.
ஒரிரு நாட்களில் காவல்துறை மற்றும் எம்ஏசிசியிடம் நாங்கள் அறிக்கை தாக்கல் செய்வோம் என்று அவர் அவசர கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாரி கெச்சிக், குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் அஜிசி அபு நைம், லாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைலி அப்துல் ரஹ்மான் மற்றும் கோல கங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்கந்தர் துல்கர்னைன் அப்துல் காலித் ஆகியோர் அன்வார் இப்ராஹிமின் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறினர். தங்கள் வாக்காளர்களுக்காக அன்வாருக்கு ஆதரவளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். சுஹைலி ஏற்கனவே பெர்சத்துவில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கும், இஸ்கந்தர் துல்கர்னைன் நான்கு ஆண்டுகளுக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.









