கடல் நீர்ப்பெருக்கு காரணமாக கோலக் கெடாவில் வெள்ளம்

அலோர் ஸ்டார், நவம்பர் 24 :

இன்று கோலக் கெடாவில் கடல் நீர் 2.95 மீட்டர் உயரத்தை எட்டியதன் காரணமாக ஏற்பட்ட கடல் நீர்ப்பெருக்கினால் கோலக் கெடா படகு முனையம், தாமான் ஸ்ரீ புத்ரா, கோத்தா மெரினா மார்க்கெட் மற்றும் கோலக் கெடா நகர்ப்பகுதி என்பன வெள்ளத்தில் மூழ்கின என்று கோத்தா ஸ்டார் மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி, கேப்டன் நார்லிசாவதி இஸ்மாயில் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு 12.40 மணியளவில் ஏற்பட்ட கடல் நீர்ப்பெருக்கு காரணமாக கடல் மட்டம் 2.9 மீ என்ற முன்னறிவிப்பைத் தாண்டியது. இருப்பினும் “நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கோத்தா ஸ்டாரின் குடிமைத் தற்காப்புப் படை உறுப்பினர்களால் ககடற்கரையோரங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது என்றார்.

“பெக்கன் குவாலா கெடா, பசார் கோட்டா மெரினாவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, அதிக அலையின் தாக்கம், மேலும் கோலா கெடா படகு முனையம் மற்றும் தாமான் செரி புத்ரா குவாலா கெடாவில் நீர் மட்டத்தில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டது. எனினும், வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் பாதிக்கப்படவில்லை மற்றும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது,” என்றும் அவர் இன்றுவெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here