தீபாவளிப் பொருட்கள் வாங்குவதற்கு ஏற்ற இடம் மைடின்

நாட்டில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்த முன்னணி விற்பனை மையங்களுள் ஒன்றாக மைடின் (Mydin) குழுமம் விளங்குகின்றது. மைடின் குழுமம் என்றுமே வாடிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்றது. அதன் அடிப்படையில் பல இன மக்கள் வாழும் நம் நாட்டில் பண்டிகை காலங்களில் சிறப்புக் கழிவுடன் பொருட்கள் இந்த வர்த்தக மையத்தில் விற்கப்படுகின்றன. அவ்வகையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்புக் கழிவுகள் வழங்கப்படுவதாக மைடின் முகமட் ஹோல்டிங் பெர்ஹாட் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ வீரா டாக்டர் ஹாஜி அமிர் அலி மைடின் தெரிவித்தார்.

குறிப்பாக இம்முறை பலகாரத் தயாரிப்புப் பொருட்கள், இறைச்சி வகைகள், உணவுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் மட்டுமன்றி உடைகளும் சிறப்புக் கழிவில் விற்கப்படுகின்றன. அதிலும் சில மாதங்களுக்கு முன்பு நானே நேரடியாக இந்தியாவிற்குச் சென்று குர்தி உடைகளைக் கொள்முதல் செய்துவந்தேன். இந்த குர்தி உடைகள் மிகவும் மலிவான விலையில் விற்கப்படுகின்றன. ஆனால் அவை தரமிக்கவை. பொதுவாகத் தீபாவளிக்கு வாங்கும் பிரத்தியேக உடைகள் பண்டிகைக்கால உடைகளாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால் குர்தி போன்ற உடைகள் பின்னாளில் வழக்க நிலையிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில் அரிசியும் மிகவும் அத்தியாவசிய உணவுப் பொருளாகக் கருதப்படுகின்றது. உள்நாட்டு வெள்ளை அரிசி விவகாரம் அண்மைக் காலமாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் நாங்கள் வெளிநாட்டு இறக்குமதி வெள்ளை அரிசியை மிகவும் நியாயமான குறைந்த விலையில் விற்கின்றோம். வாடிக்கையாளர்கள் இந்தத் தீபாவளிப் பண்டிகை காலகட்டத்தில் மைடின் விற்பனை மையங்களில் மிக மலிவான விலையில் இந்த இறக்குமதி வெள்ளை அரிசியை வாங்கிச் செல்லலாம்.

இதனிடையே மைடின் பேரங்காடிகளில் இந்தியப் பாரம்பரிய மசாலா, தானிய வகை உணவுப் பொருட்களும் விற்கப்படுகின்றன. அதிலும் மிகவும் பாரம்பரியமான எளிதில் கிடைக்காத மசாலா, தானிய வகைகள் மைடின் விற்பனை மையங்களில் கிடைக்கும். இதற்காகவே நாங்கள் பிரத்தியேகமாக ஒரு பகுதியைத் தயார்ஙெ்ய்து வைத்துள்ளோம். பருப்பு வகைகள், மசாலா கலவைகள் மட்டுமன்றி நாட்டுச்சக்கரை, அப்பள வகைகளும் இந்தப் பகுதியில் கிடைக்கும். இது தவிர முறுக்கு உள்ளிட்ட பலகாரத் தயாரிப்புப் பொருட்களும் மைடின் பேரங்காடியில் விற்கப்படுகின்றன என்றும் டாக்டர் ஹாஜி அமிர் அலி விவரித்தார். எனவே வாடிக்கையாளர்கள் தீபாவளிப் பண்டிகைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கு ஏற்ற மையமாக மைடின் விளங்குகின்றது என்றும் அவர் கருத்துரைத்தார்.

இண்ட்ரா வேலி நிறுவனத்தின் அரிசி – சூரியகாந்தி எண்ணெய் விற்பனை

இதற்கிடையே நாடு தழுவிய அளவில் உள்ள மைடின் பேரங்காடியில் உள்நாட்டு நிறுவனமான இண்ட்ரா வேலி (Indra Valley) தயாரிப்புப் பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்நிறுவனத்தின் 3 வகையான பாஸ்மதி அரிசி வழக்கத்தைவிட மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. வெள்ளை அரிசியைப் போன்ற ருசி தரும் அரிசி (Aromatic Basmathi), பண்டிகைக் காலங்களில் பயன்படுத்தக்கூடிய குறிப்பாக பிரியாணி செய்வதற்கு ஏற்ற வகையிலான அரிசிகள் (Sella Cream, Golden Pusa) ஒரு கிலோ, 5 கிலோ எடைகளில் விற்கப்படுவதாக இந்நிறுவனத்தின் இயக்குநர் ஜெசிகா சுப்பையா தெரிவித்தார்.

இது தவிர இந்நிறுவனத்தின் சுரியகாந்தி சமையல் எண்ணெய்யும் மைடின் பேரங்காடியில் நியாய விலையின் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த சமையல் எண்ணெய்யானது சுகாதார அமைச்சின் அங்கீகாரத்தைப் பெற்றதாகும். அதிலும் 100 விழுக்காடு சீத்தமான சூரியகாந்தி பூ எண்ணெய் இது என்று எங்களால் உறுதியாகக் கூற முடியும் என்றார் அவர். இந்த வகை சமையல் எண்ணெய் ஒரு லிட்டர், 2 லிட்டர், 3 லிட்டர்களில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான வகையிலான போத்தல்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன எனவும் ஜெசிகா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here