கோலாலம்பூர்:
தீபாவளியையொட்டி நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு இலவச டோல் கட்டணம் (Free toll) விதிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
ஜோகூரில் உள்ள பங்குனான் சுல்தான் இஸ்கந்தர் (BSI) டோல் பிளாசா மற்றும் தஞ்சோங் குபாங் டோல் பிளாசா ஆகிய தேசிய எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளைத் தவிர ஏனைய நெடுஞ்சாலைகளிலுள்ள டோல் பிளாசாக்களில் அனைத்து வகையான வாகனங்களுக்கும் கட்டண விலக்கு அளிக்கப்படும் என்றார் அவர்.



















