ஜார்ஜ் டவுன்:
பினாங்குக் குடிநுழைவுத் துறையினர், ஜாலான் டாக்டர் லிம் ச்வீ லியோங்கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் நடத்திய சோதனையில், ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் 22 வெளிநாட்டினரை கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு 10.30 மணியளவில் மொத்தம் 32 பேர் சோதனை செய்யப்பட்டு, அதில் 22 பேர் பல்வேறு குடியேற்றக் குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று குடிநுழைவுத் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஐந்து வியட்நாம் பெண்கள், 15 தாய்லாந்து பெண்கள் மற்றும் இரண்டு தாய்லாந்து ஆண்கள் அடங்குவர், அவர்களும் பெண்களைப் போல உடை அணிந்து, நடந்து கொண்டனர் என்றும் அவர் கூறினார்.
“பொதுமக்கள் புகார் மற்றும் துறையின் புலனாய்வு அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும், குறித்த சோதனையின் போது, பல வெளிநாட்டவர்கள் கடையில் ஒளிந்து கொள்வதற்காக வளாகத்தின் இரண்டாவது மாடிக்கு ஏறி தப்பிக்க முயன்றனர், அப்பகுதி இருட்டாக இருந்தது மற்றும் சேதமடைந்த தளபாடங்கள் மற்றும் மின்சாதனப் பொருட்களால் அவ்வறை நிரப்பப்பட்டிருந்தது.
“இருப்பினும் எங்கள் அதிகாரிகள் அனைத்து சந்தேக நபர்களையும் வெற்றிகரமாக கைது செய்தனர்” என்று அவர் கூறினார்.