மலேசிய பாடகி குயின்சி செங் 37 வயதில் காலமானார்

கோலாலம்பூர்:

M-Girls என்ற பெண் குழுவின் முன்னாள் உறுப்பினரான மலேசிய கலைஞர் குயின்சி செங் காலமானார். அவருக்கு வயது 37.

நேற்று செவ்வாயக்கிழமை செங்கின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த செய்தி அறிவிக்கப்பட்டது. சில ஊடகங்களின் அறிக்கைப்படி இவர் சில நாட்களாக மூளைஸ் சோர்வினால் பாதிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

“நாங்கள் காலை 8 மணியளவில் டாமன்சாராவுக்கு வந்து, காலை உணவை சாப்பிட்டு விட்டு 8.30 மணிக்கு படப்பிடிப்பைத் தொடங்கினோம். அந்த நேரத்தில் அவள் நன் றாக இருந்தார்,” என்று அவர் உள்ளூர் கலைஞர் சாய் ஜி ஊடகங்களிடம் கூறினார்.

காலை 10.30 மணியளவில் இரண்டாவது அத்தியாயத்தைப் படமாக்கத் தயாராகும் போது, ​​தனக்கு மயக்கம், குமட்டல் மற்றும் தலையில் வலி ஏற்பட்டதாக செங் கூறினார். அப்போது செங் வாந்தி எடுத்தபோது நானும் சில நண்பர்களும், செட்டில் இருந்த ஊழியர்களுடம் இணைந்து ஆம்புலன்சை அழைத்ததாக அவர் கூறினார்.

அந்த நேரத்தில், பாடகி இன்னும் சுயநினைவுடன் இருந்ததால், மருத்துவப் பதிவுகளுக் காக தனது காதலரைத் தொடர்பு கொள்ள ஊழியர்களுக்கு தனது மொபைல் ஃபோனில் கடவுக்குறியீட்டை கொடுத்தார். குயின்சி சுயநினைவை இழந்தபோதும் சுவாசித்துக் கொண்டிருந்தாள்.

“இருப்பினும், அவளுடைய இதயம் மிக வேகமாக துடித்தது. விரைவில், அவளுடைய உதடுகள், கைகள் மற்றும் கால்கள் ஊதா நிறமாக மாறியது” என்று சாய் ஜி கூறினார்.

ஐந்து நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் அவரை உயிர்ப்பிக்க முயற்சித்த போதிலும்,முயற்சி பலனளிக்கவில்லை.செங்கின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை (டிசம்பர் 2) நடைபெறும் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here