நீரில் மூழ்கடிக்கப்பதால் 10 பூனைக்குட்டிகள் இறந்ததா?

பகாங், ஜெரான்டுட்டில் உள்ள டெமின் மொத்த விற்பனை சந்தையில்  சமீபத்தில் 10 பூனைக்குட்டிகள் நீரில் மூழ்கடிக்கப்பதாக நம்பப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த புதன்கிழமை மாலை 5 மணியளவில் இறந்த பூனைக்குட்டிகளைக் கண்டுபிடித்த 27 வயது இளைஞன் தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து ஜெரான்டுட் காவல்துறைத் தலைவர் அஸ்மான் மாட் கமிஸ் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

புகார்தாரர் பூனைக்குட்டிகளை என்ன செய்தார்கள் என்று கவலைப்பட்டார். அவர் அடிக்கடி சந்தையில் வழி தவறி வரும் பூனைகளுக்கு உணவளித்தார் என்று அஸ்மான் மேற்கோள் காட்டினார். சந்தையில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) நிறுவப்படவில்லை. ஆனால் முதற்கட்ட விசாரணையில் விலங்குகள் வளாகத்திற்குள் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் முன் வந்து விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 428இன் கீழ் (விலங்குகளைக் கொல்வதற்காக) விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.நேற்று சினார் டெய்லி, பூனைக்குட்டிகளை நீரில் மூழ்கடித்தவர்களை அடையாளம் காண மலேசிய விலங்குகள் சங்கம் RM5,000 பரிசு வழங்குவதாக அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here