அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 9 மத்திய சிறைகளில் இருந்து  27 பேர் விடுதலை

சென்னை:

தமிழ்நாடு அரசு சார்பில் அண்ணாவின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 15 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 9 மத்திய சிறைகளில் உள்ள 3 பெண் கைதிகள் உள்பட 27 பேரை தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி சிறைத்துறை நேற்று விடுதலை செய்துள்ளது.

குறிப்பாக, மத்திய புழல் சிறை-1ல் 3 பேர், வேலூர் மத்திய சிறையில் 7 பேர், கடலூர் மத்திய சிறையில் 2 பேர், சேலம் மத்திய சிறையில் 4 பேர், கோவை மத்திய சிறையில் 4 பேர், மதுரை மத்திய சிறையில் 2 பேர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2 பேர், புழல் பெண்கள் சிறையில் 2 பேர், வேலூர் பெண்கள் சிறையில் ஒருவர் என மொத்தம் 27 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here