யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம்? …

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் யு.பி.ஐ. மற்றும் ‘ரூபே டெபிட்’ கார்டு பரிவர்த்தனைகளுக்கான வர்த்தக தள்ளுபடி கட்டணம் (எம்.டி.ஆர்.) ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது வங்கிகள் மற்றும் பணப் பரிவர்த்தனை சேவை நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் தொழில்நுட்ப முதலீடுகள் அதிகரித்துள்ளன.இதை ஈடுகட்டும் வகையில் ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமான யு.பி.ஐ. பரி வர்த்தனைகளுக்கு 0.25 சதவீதம் முதல் 0.35 சதவீதம் வரை வர்த்தக தள்ளுபடி கட்டணத்தை மீண்டும் வசூலிக்க அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த கட்டணத்தில் இருந்து சிறு வணிகர்களுக்கு விலக்கு அளிக்கப்பட உள்ளது.

பரிவர்த்தனை

ஆண்டு வருவாய் ரூ.1½ கோடி வரை உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பரிவர்த்தனை தொகையைப் பொருட்படுத்தாமல் இந்த கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவான யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு அரசு 0.15 சதவீத ஊக்கத்தொகையை வழங்கி வருகிறது. ஆனால், டிஜிட்டல் கட்டமைப்பு செலவுகள் அதிகரித்து வருவதால் இந்த மானியம் போதுமானதாக இல்லை என்று இந்திய பணப் பரிவர்த்தனை கவுன்சில் தெரிவித்துள்ளது. நிதிச் சேவைகள் துறை தகவலின்படி, தற்போதைய ஊக்கத்தொகை திட்டமானது தொழில்துறையின் செலவுகளில் 11 சதவீதம் மட்டுமே ஈடு செய்கிறது. யு.பி.ஐ. பரிவர்த்தனைகளில் ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமான பரி வர்த்தனைகள் மொத்த பரிவர்த்தனைகளில் 4 சதவீதம் மட்டுமே ஆகும். கடந்த மாதம் (ஜூலை) மட்டும் 2 ஆயிரத்து 366 கோடி யு.பி.ஐ. பரிவர்த் தனைகள் நடந்துள்ளன. கடந்த 2017 நிதியாண்டில் 2 கோடியாக இருந்த ஆண்டு பரிவர்த்தனை அளவு, கடந்த நிதியாண்டில் 24 ஆயிரத்து 162 கோடியாக உயர்ந்துள்ளது.

சட்டத் திருத்தம்

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதோடு, வங்கிகளுக்கு நிலையான வருவாயை ஏற்படுத்திக்கொடுக்க மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பெரிய நிறுவனங் ளுக்கு மட்டும் இந்த கட்டணம் பொருந்தும் வகையில் சட்டத் திருத்த மசோதாவும் நிறைவேறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here