பாப்பாரில் 3 மாடி வீடு தீயில் எரிந்து நாசம்

பாப்பார் :

தாமான் நாகபாஸில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாடி வீடு தீயில் எரிந்து நாசமானது.

ஆனால் அவ்வீட்டிலுள்ளவர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொண்டனர் அதனால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று, பாப்பர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ரோஸ்லான் ஒஸ்மான் கூறினார்.

இன்று அதிகாலை 2.15 மணிக்கு தமது துறைக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், உடனே மொத்தம் 11 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள், இயந்திரங்கள் மற்றும் அவசரகால சேவை உதவிப் பிரிவு (EMRS) என்பன சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

“முதல் மற்றும் இரண்டாவது மாடிகள் முறையே 100 சதவீதம் மற்றும் 70 சதவீதம் எரிந்தன, மூன்றாவது வீடு 70 சதவீதம் எரிந்தது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

மேலும் திகாலை 3.25 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

“சம்பவத்திற்கான காரணம் மற்றும் மொத்த இழப்பை அடையாளம் காண இன்னும் விசாரணைகள் நடந்து வருகின்றன,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here