மீண்டும் அஜர்பைஜான் பறந்த நடிகர் அஜித்… வீடியோ வைரல்

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலேயே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ‘விடாமுயற்சி’ கலை இயக்குனர் மிலன் மாரடைப்பினால் அஜர்பைஜான் நாட்டில் உயிரிழந்தார். இது திரைத்துறையில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்த படத்தின் கலை இயக்குனராக அவரது மனைவி மரியா மெர்லின் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இதற்கிடையே கடந்த 24ந் தேதி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த காரணத்தால் சிறிய இடைவெளிக்காக நடிகர் அஜித் சென்னை திரும்பினார். ஓய்வுக்கு பின்னர் கடந்த 4ம் தேதி மீண்டும் அஜர்பைஜான் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் சென்னையில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக இன்று நடிகர் அஜித்குமார் அஜர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ளார். அவர் விமான நிலையத்தில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here