வாகனமோட்டிக்கு போலீஸ் வலைவீச்சு

LK Raj

கடந்த 22 மார்ச் 2024 அன்று சுமார் மாலை 6 மணி அளவில் ஒரு காணொளி சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வந்தது. இந்த காணொளியில் ஜாலான் பெர்சியாரான் டுரோபிகானா  சாலையின் இடது புறத்தில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒரு பிக்கப் ரக கார் நிறுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே போலீசாரின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வாகனம் மற்ற வாகனமோட்டிகளுக்கு  ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் மற்ற வாகனமோட்டிகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் வகையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் இதில் சம்பந்தப்பட்டிருக்கும் வாகனமோட்டியை தீவிரமாக தேடி வருகின்றனர். தகவல் அறிந்தவர்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கோ அல்லது பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கோ அழைத்து தகவல் சொல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனிடையே இதுபோன்ற போக்குவரத்து விதிகளை மீறாமல் இருக்கும் படி வாகனமோட்டிகளுக்கு போலீஸ் அறிவுறுத்தியது.  இவ்வாறான விதி மீறல்களுக்கு ரிங்கிட் மலேசியா 5000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here